மேலும் அறிய
அடுத்து அடுத்து பறிபோகம் ஊழியர்களின் உயிர்.. படிக்கட்டிலிருந்து விழுந்த நடத்துனர் உயிரிழப்பு !
பலமுறை அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்து
Source : whats app
அரசு பேருந்துகளில் தொடரும் அலட்சியம் காரணமாக பரிதாபமாக போன நடத்துனரின் உயிர். டிக்கெட் வசூலித்து கொண்டிருந்தபோது ப்ரேக் பிடித்ததில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
நடத்துனர் கருப்பையா சாலையில் தவறி விழுந்துள்ளார்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்துனாராக பணியில் இருந்த புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மதுரை ஒத்தக்கடை பகுதியில் திருச்சி சாலையில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு இருந்ததால், ப்ரேக் அடித்தபோது பேருந்தின் கதவு மூடாமல் இருந்த்தால் திடிரென பேருந்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடத்துனர் கருப்பையா சாலையில் தவறி விழுந்துள்ளார்.
உயிரிழந்த நடத்துனர்
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் கருப்பையாவை சிகிச்சை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது இருபது நிமிடத்திற்கு மேலாக தாமதப்படுத்திய தால் உடனடியாக அருகில் இருந்த ஆட்டோ மூலமாக நடத்துனர் கருப்பையாவை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவர்கள் கருப்பையாவின் உடலை சோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பேருந்தின் கதவுகள் முறையாக மூடப்படாத நிலையில், சாலை நடுவே இருந்த தடுப்பு காரணமாக பிரேக் அடித்து கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
தலையில் அடிபட்டு விழுந்த நிலையில் ஆம்புலன்ஸ் சேவை தாமதமானதாலும் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளை தானியங்கி கதவு மூலமாக மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத சூழலில் முறையாக கண்காணிக்காத நிலையிலும் உள்ளது. இது போன்ற விபத்துகளில் பயணிகளை தொடர்ந்து தற்போது போக்குவரத்து பணியாளர்களும் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது, அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் வேகத்தடை மற்றும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாத நிலையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள்..”பலமுறை அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















