மேலும் அறிய

தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்படும் சோகம்.. ஓட்டுநரை தொடர்ந்து மின் ஊழியர் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு.. மதுரையில் மின் ஊழியர் உயிரிழப்பு.. தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்படும் சோகம்.

மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

பேருந்து ஓட்டும் போது உயிரிழந்த ஓட்டுநர்
 
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் நகர பேருந்தில் ஓட்டுனராக பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பழனியில் இருந்து கணக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி கூச்சலிட்டார். பேருந்தின் நடத்துனர் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். அப்போது ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்திருந்த பிரபு சிறிது நொடிகளில் உயிரிழந்தார். உடனடியாக மீட்கபட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையில் மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மதுரை மாநகர் பீ.பீ.சாவடி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனா கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவருகிறார். மதுரை காளவாசல்  பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் மதுரை கோச்சடை முத்துமாரியம்மன் கோயில் அருகே மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுது தொடர்பான புகாரின் கீழ் சரிசெய்வதற்காக மின்கம்பத்தில் ஏறி நின்றபடி பணி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை
 
தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை இணைப்பை துண்டித்து அவரது உடலை மீட்டனர்.  இதனையடுத்து அவரது உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து  தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தென்மாவட்டங்கள் ஏற்படும் சோகம்
 
கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை பகுதியில் செயல்படும் தனியார் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை என தென்மாவட்டங்களில் வேலை செய்யும்போது பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தென்மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget