மேலும் அறிய
மதுரை: சிலைமான் பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 5 பேர் கைது..!
தலைமறைவான நிலையில் மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்து 5750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

கடத்தியவர்கள் மற்றும் லாரி
மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 115 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 5750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
— Arunchinna (@iamarunchinna) July 25, 2022
மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் அதிகாரரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 115 மூடைகளில் 50kg எடை கொண்ட 5750kg ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.@MaduraiEmerging pic.twitter.com/n3lUlHfSlz

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆடி வெள்ளியில் மலர் வியாபாரம் அமர்க்களம்; மதுரை, திண்டுக்கல் மார்கெட்டில் மல்லிகைப் பூ விலை ரூ.1200 ஐ தொட்டது !
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேஷன் அரிசியை கடத்தியது ராம்நாடு பரமக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பாபு, மதுரையைச் சேர்ந்த கோவிந்தன், சபரி, முத்துப்பாடி, முருகன், சரவணன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட உரிமையாளர் ராமமூர்த்தி பாபு ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்து 5750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
மதுரை, சிவகங்கை,தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரிசிக் கடத்தல் அதிகளவு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில் மதுரை மாவட்டத்தில் அதிகாரிகள் தொடர்ந்து அரிசி கடத்தல் லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















