மேலும் அறிய
Advertisement
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மதுரையின் பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ்
உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு - கெட்டுப்போன சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பிரபல உணவகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைவர் சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அன்று இரவே சிவக்குமார் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் பிரபல உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியீட்டிருந்தார். அதன் எதிரொலி பிரபல உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வில் மூன்று கிலோ கெட்டுப் போன மாமிசம் மற்றும் நான்கு கிலோ பழைய சாதம் பறிமுதல் செய்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது ஆய்வில் மூலம் தெரிவந்துள்ளது. அதனை தொடர்ந்து உணவகத்தில் கண்டறியப்பட்ட ஏழு குறைகளை 7 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து விளக்கம் அளிக்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்ததுள்ளது. மேலும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்பிரிவு 55 கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 200 ஆண்டுக்கு மேலாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடும் மொஹரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion