மேலும் அறிய
Advertisement
”இது சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி” - மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.பி. சு.வெங்கடேசன்..!
தமது கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மதுரை எம்.பி.சு.வெங்டேசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) உள்நோயாளிகள் அல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வசதி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஒன்றிய அரசு சுகாதாரத்துறையின் CGHS திட்டத்தில் உள்நோயாளிகளல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகாவுக்கு வழங்கப்பட்டு வந்தது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 30, 2023
எனது கோரிக்கையை ஏற்று இனி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்படும்.
அமைச்சருக்கு நன்றி. pic.twitter.com/LkO1CUNHoL
இந்நிலையில் அமைச்சர் மாண்டவியா கடந்த ஜூலை 24 ஆம் தேதி மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இனிவரும் காலங்களில், தனியார் சித்த மருத்துவமனைகளிலும் இந்த வாய்ப்பு அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார். இது நவீன சித்த மருத்துவ துறைக்கும், தொன்மையான தமிழ் மரபு மருத்துவத்திற்குமான மிகப்பெரிய வெற்றி. தமது கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மதுரை எம்.பி.சு.வெங்டேசன் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vegetables Price: அச்சுறுத்தும் தக்காளி.. அதிரடி ஏற்றம்.. இன்றைய காய்கறி விலை நிலவரம் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion