மேலும் அறிய

லஞ்சம் கேட்டு மிரட்டல்: தலைமறைவான பெண் ஆய்வாளர் - தேடிக்கண்டுபிடித்து கைது செய்த போலீஸ்

17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறி, அரசு மருத்துவரை மிரட்டி 10 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள்  எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா , என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் புகார் தர வரும் நபர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல், சமரசம் செய்து வைத்து தணிசமான தொகை பார்த்து வருவதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
 
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய, பெண் காவலர்கள் சிலர் ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று, ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், ஆய்வாளராக பணியாற்றி வந்த மகிதா   கடந்த மாதம்  தான் ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக அவருக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகாரை வைத்துக் கொண்டு , அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு, இதன் அடிப்படையில்  ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். 
 
இந்தநிலையில் மறைமலைநகர் காவல் நிலையத்தில் மருத்துவர் பராசக்தி, தனக்கு ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆகியோர், தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் வரை கேட்பதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
 
தாங்கள் கைது செய்யப்படுவோம் என அச்சமடைந்த மகிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தின்  விசாரணைக்கு வந்த போது, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.  ஆய்வாளர் மகிதா முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்ந்து தலைமறைவாகினார்.
 
இந்தநிலையில்,  ஆய்வாளர் மகிதா தலைமறைவானதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பதுங்கி இருந்த ஆய்வாளர் மதிதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து ஆய்வாளர் மதிதாவை மறைமலைநகர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Embed widget