மேலும் அறிய

Lok sabha election 2024: "திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேலி!

தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாகவும், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்களோ என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 
 

மக்களவைத் தேர்தல்:

 
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. இதில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.
 
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழக கட்சிக்கு 2 இடங்களும் அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 33 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. நேற்று 16 இடங்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பி.ஜே.பி., மதவாத கட்சி

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை கோரிப்பாளையம் பகுதியில்  சந்தித்தார். அப்போது, "பாரதிய ஜனதா கட்சியை விட ஆபத்தான கட்சி அ.தி.மு.க., என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க வைத்தது அ.தி.மு.க., தான்.
பாலகிருஷ்ணன் நல்ல மன நிலையில் சொன்னாரா? இல்லை அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா என தெரியவில்லை!. தோல்வி பயத்தில் இப்படி பேசி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத கட்சி. அதைவிட  நாங்கள் ஆபத்தானவர்கள் என சொல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது

பாமக உள்ளிட்ட கட்சியினர் பாஜக கூட்டணிக்கு போவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள். தி.மு.க., அரசும், பா.ஜ.க., அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது. மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ? தி.மு.க., எம்.பி.க்கள் ஐந்தாண்டுகளாக எதுவும் செய்யவில்லை. இதே போலத்தான் கேஸ் விலையை குறைப்பேன் என மோடியும் சொன்னார், வீட்டுக்கு 15 லட்சம் தருவேன் என்றார். எதையும் செய்யவில்லை" என்றார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget