மேலும் அறிய
தேவர் ஜெயந்தி விழா; நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - எங்கெல்லாம்?
மருதுபாண்டியர்கள் நினைவு தினம், தேவர் ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநுகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி
மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி (ம) குருபூஜையினையொட்டி 3 தினங்கள் மதுபானக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
27.10.2023 சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2023 மற்றும் 30.10.2023 இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி (ம) குருபூஜை தினவிழா முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் 27, 29, 30 ஆகிய 3 நாட்கள் FL1/FL2/FL3/FL3A/FL4A மற்றும் FL11 ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகம், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இந்த 3 நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களும் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















