மேலும் அறிய
Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி
உணவுகளை பரிமாறியதோடு அவர்கள் சாப்பிட்ட இலையை மண்டல குழு தலைவர் எடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
![Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி Ayudha Pooja 2023 Kanchipuram zone committee president gave delicious non-vegetarian food and special gifts corporation employees TNN Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/f3461d0dc79c474ef4df0c07c3cfd74c1698031368521113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு.
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ உணவு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கிய மண்டல குழு தலைவர். உணவுகளை பரிமாறியதோடு அவர்கள் சாப்பிட்ட இலையை மண்டல குழு தலைவர் எடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி
காஞ்சிபுரம் (Kanchipuram News): நவராத்திரி நிறைவு விழாவாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் சாதி, மதம் பார்க்காமல் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாங்கள் செய்கின்ற தொழிலுக்கு மரியாதை செய்யும் விழாவாக இது பார்க்கப்படுவதால், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
![தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/379d2ad086ff6d247009776b2afdd23e1698031394873113_original.jpg)
காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டல குழு அலுவலகத்தில்
அதேபோன்று ஆயுத பூஜை விழாவின் பொழுது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிறுவனம் சார்பில், இனிப்புகள் வெகுமதிகள் உள்ளிட்டவை வழங்குவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் அரசு சார்ந்த இடங்களில் கூட, ஆயுதபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டல குழு அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
![உணவுகளை பரிமாறியதோடு அவர்கள் சாப்பிட்ட இலையை மண்டல குழு தலைவர் எடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/ac7a7019f4b36bfca2ed8a76f408010b1698031448911113_original.jpg)
அறுசுவை அசைவ உணவு
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 4வது மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் ஏற்பாட்டில் அறுசுவை அசைவ உணவுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மண்டல குழு தலைவருக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
![தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/23/5e83e4fbcf87cfbb168f5d0220af4dcb1698031416984113_original.jpg)
சாப்பிட்ட இலையை மண்டல குழு தலைவர்
மேலும், மாநகராட்சி பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ உணவுகள் பரிமாறியதோடு அவர்களின் உழைப்பை போற்றும் வகையிலும் அவர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்கள் சாப்பிட்ட இலையை மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் எடுத்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion