40 அடி உயரத்தில் தவறி விழுந்த கட்டுமானப்பணியாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு... மற்றொருவர் கவலை!
மேல்சிகிக்சைக்காக இருவரையும் தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது வழியிலேயே கொத்தனார் ஏசு இறந்து விட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானல் பகுதியில் மலைகள் சூழ்ந்த இடங்கள் என்பதாலும் மழை காலங்களில் இயற்கை இடர்பாடுகளான மலைசரிவுகள் , அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் உள்ள மலையடிவார பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்படுகளை விதித்துள்ளது.
ஆனால் பல்வேறு கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டியுள்ளதாக எழுந்த புகாரையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வரன் முறை படுத்தும் விதமாக கட்டடங்கள் திறக்கப்பட்டு சீரமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது,
இந்நிலையில் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது, இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்த பணியினை கொத்தனாராகிய பெருமாள்மலையை சேர்ந்த ஏசு(37), மற்றும் மச்சூர் பகுதியை பாலசுப்பிரமணி(43) ஆகிய இருவரும் மேற்கொண்டு வரும் பொழுது எதிர்பாராத விதமாக உயரமாக கட்டப்பட்டிருந்த சாரத்தில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் தவறி விழுந்துள்ளனர்,
இதனை பார்த்த சக வேலையாட்கள் இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிக்சைக்காக இருவரும் தேனி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொண்டு சென்றனர், செல்லும் வழியிலேயே கொத்தனார் ஏசு இறந்து விட்டதாக 108 ஆம்புலென்ஸ் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏசுவின் சடலம் உடற் கூறு ஆய்விற்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி தேனி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தில் இருந்து கொத்தனார்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கொடைக்கானல் மற்றும் பெருமாள்மலை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு கொடுத்த தகவல்கள் கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பட்டாசுகள் வடிவில் ஹோம் மேட் சாக்லெட்கள் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!