மேலும் அறிய

keezhadi excavation: கீழடியில் 10ம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்த முதல்வர்; அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு

பத்தாம் கட்ட அகழாய்வு பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின்  கீழடி, கொந்தகை மற்றும்  வெம்ப கோட்டை, திருமலாபுரம், ஊத்து கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள  8 இடங்களில்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

'கீழடி' - என்ற ஒற்றைச் சொல் தமிழர்கள் கொண்டாடும் சொல்லாக இருந்துவருகிறது. 2600 ஆண்டுகள் முந்தைய தமிழர்களின் பெருமையை சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கியது.
 
கீழடி அகழாய்வுப் பணி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்கு உட்பட்ட கீழடி, மதுரைக்கு அருகே உள்ளது. கீழடியில் கடந்த  2014 -ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி அகழாய்வில் இதுவரை 9 கட்ட அகழாய்வு பணிகளும் அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 4 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த வருடம் கீழடியில் நடந்த 9-ம் கட்ட அகழாய்வில் 14 குழிகள் தோண்டப்பட்ட  800 மேற்பட்ட  பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் படிக எடைக்கல், பாம்பின் உருவம், தங்க வளையம், காப்பர்  ஊசி உட்பட சிறப்பு வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
 
10-ம் கட்ட அகழாய்வுப் பணியை துவக்கிய முதல்வர்

வழக்கமாக அகழாய்வு பணி  ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். இந்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பத்தாம் கட்ட அகழாய்வு பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின்  கீழடி கொந்தகை, மற்றும்  வெம்ப கோட்டை, திருமலாபுரம், ஊத்து கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள  8 இடங்களில்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். குறிப்பாக, கீழடியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் ஜவகர், பிரபாகரன், கார்த்திக் என்ற மூவருக்கு சொந்தமான இடத்தில்  அகழாய்வு பணி இந்த வருடம்  நடைபெற இருப்பது என்பது, குறிப்பிடத்தக்கது.
 
அரிய வகை பொருட்களை கண்டுபிடிக்க வாய்ப்பு

இந்த நிகழ்வில்  தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித்,  கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்களான ரமேஷ், அஜய்‌ மற்றும் அகழாய்விற்கு இடம் கொடுத்த விவசாயிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர். கடந்த வருடம் போல் இந்த வருடமும் அகழாய்வு  பணியில் அரிய வகை பொருட்களை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget