கார்த்திகை விரதம் ஆரம்பம் எகிறும் காய்கள் விலை; தேனி மாவட்டத்தில் இன்றைய விலை நிலவரம் இதோ
தேனி உழவர்சந்தையை விட வெளிமார்க்கெட் விலை 20 சதவீதம் விலை அதிகமாக உள்ளது.
தேனி மார்க்கெட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. தற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், சபரிமலை பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை சமைக்கத் தொடங்கி உள்ளனர். அதாவது முழு சைவமாக மாறி உள்ளனர்.
ATP Finals: ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்; ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
இதனால் காய்கறிகளின் தேவை சற்று அதிகரித்துள்ளது. அதேநேரம், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் விளைச்சலும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன. தேனி உழவர்சந்தையை விட வெளிமார்க்கெட் விலை 20 சதவீதம் விலை அதிகமாக உள்ளது.
தேனி உழவர்சந்தை விலை நிலவரத்தை காணலாம். காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தரிக்காய்- 38, தக்காளி- 40, வெண்டைக்காய்- 40, கொத்தவரங்காய்- 35, சுரைக்காய்- 12, பாகற்காய்- 40, பீர்க்கங்காய்- 54, முருங்கைக்காய்- 55, பூசணிக்காய்- 16, பச்சைமிளகாய் உருட்டு- 25, பட்டை அவரைக்காய்- 70, தேங்காய்- 31, உருளைக்கிழங்கு- 44, கருணைக்கிழங்கு- 50, சேப்பங்கிழங்கு- 65, மரவள்ளிக்கிழங்கு- 30, வெற்றிலை வள்ளிக்கிழங்கு- 40, கருவேப்பிலை- 40, கொத்தமல்லி- 40, புதினா- 40, சின்னவெங்காயம்- 90, பெரிய வெங்காயம்- 60, இஞ்சி- 100, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 28, நுால்கோல்- 38, முள்ளங்கி- 32, முருங்கை பீன்ஸ்- 80, பட்டர்பீன்ஸ்- 140, சோயாபீன்ஸ்- 88, முட்டைக்கோஸ்- 22, காரட்- 32, சவ்சவ்- 15, காலிபிளவர்- 30, பச்சைபட்டாணி- 80, எலுமிச்சை- 100, மாம்பழம்- 200, சப்போட்டா- 200, பப்பாளி- 30, திராட்சை- 100, மாதுளைபழம்- 280, மாங்காய்- 85, மொச்சைக்காய்- 38, கோழிஅவரை- 60, பெல்ட் அவரைக்காய்- 70, கீரை வகைகள்- 25.