ATP Finals: ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்; ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
ATP Finals Title: ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
செர்பிய நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான இவருக்கு நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) ஏழாவது முறையாக ஏ.டி.பி.( ATP Finals title) டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இத்தாலியில் உள்ள துரின் நகரில் நேற்று நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச் இத்தாலிய வீரர் ஜானிக் சின்னரை (Jannik Sinner) எதிர்கொண்டார். ஆட்டத்தின் முடிவில் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை வீழ்த்தினார். 36-வயதாகும் ஜோகோவிச் ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரை 7-வது முறையாக வென்றிருக்கிறார். டென்னிஸ் ஆடவர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 400-வது வாரமாக முதலிடத்தில் இருக்கிறார்.
டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்கள் வகித்த வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. ATP (The Association of Tennis Professionals) தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பான விளையாடிய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்தார். ரோஜர் ஃபெடரர் 6 முறை ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியஷ்ப் பட்டத்தை வென்றிருக்கிறார். ஜோகோவிச் இந்த ஆண்டின் க்ராம்ஸ்லாம் போட்டிகளான அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் என மூன்றிலும் பட்டம் வென்றுள்ளார். இப்போது ஏ.டி.பி. தொடரிலும் வெற்றி பெற்றிருக்கிறார். ஜோகோவிச் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போது புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் 24-வது க்ராம்ஸ்லாமை வென்றெடுத்தார்.
இந்த வெற்றி குறித்து ஜோகோவிச் கூறுகையில், “ இந்தப் போட்டியின் வெற்றி பெற்றதை மறக்கவே முடியாது. ஜானிக்கின் சிறப்பான ஆட்டத்தையும் மறக்க முடியாது. இதில் வென்றுவிட வேண்டும் என நினைத்திருந்தேன்.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
22-வயதான இளைஞர் சின்னர் இத்தாலி நாட்டிலிருந்து முதன் முறையாக ஏ.டி.பி. இறுதிப்போட்டியில் பங்கேற்ற வீரர். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சின்னர், இறுதிப்போட்டியிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், ஜோகோவிச் முன் போதுமானதாக இல்லை. ஜோகோவிட் - சின்னர் இருவருக்கிடையேயா போட்டி நிச்சயம் டென்னிஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருக்கும்.
இந்தத் தொடரில் ஜோகோவிச் மூன்று இளம் வீரர்களை வீழ்த்தியுள்ளார். ஹோல்டர் ரூன், இந்தாண்டு விம்பிள்டன் சாம்பியன் கார்லஸ் அல்க்ராஸ், ஜானிக் சின்னர் என மூன்று இளம் வீரர்களும் சிறப்பாக விளையாட கூடியவர்கள். இளம்வீரர்களுக்கு மத்தியில் வெற்றி பெறுவது குறித்து ஜோகோவிச்சிடம் கேட்டப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,” அவர்கள் என்னுடன் விளையாடும்போது, சிறப்பாக ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே என்னை வீழ்த்த முடியும் என்று நினைப்பேன். “ என்று தெரிவித்துள்ளார். அதோட, சின்னர். அல்க்ராஸ், ரூன் மூவரையும் டென்னிஸ் விளையாட்டின் எதிர்காலமாக அவர் குறிப்பிடுகிறார். ‘தி நெக்ஸ்ட் பிக் த்ரீ’ (the next big three" ) என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
ஜோகோவிச் டென்னிஸ் பயணத்தில் அடுத்த இலக்கு குறித்த கேள்விக்கு பதிலளிததவர்,” எப்பொதும் என்னுடைய இலக்கு பெரிதாகவே இருக்கும். என் உடல் நான் சொல்வதை கேட்கிறது. நல்லவர்களும் என்னுடன் இருக்கிறார்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேதே அடுத்தாண்டிற்கான இலக்கு. “ என்று புன்னகையுடன் தெரிவித்தார். வாழ்த்துகள், ஜோகோவிச்!