மேலும் அறிய
Advertisement
Mekedatu Dam: மேகதாது அணை உறுதியாக கட்டுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்; முதல்வர் கண்டன குரல் கொடுப்பாரா? -அண்ணாமலை கேள்வி
மேகதாது அணை உறுதியாக கட்டுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் கண்டன குரல் கொடுப்பாரா? -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
மதுரையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வழியாக வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது.
சி.எஸ்.கே., வெற்றிக்கு பாரதிய ஜனதா கட்சி காரணம் என்று கூறியது குறித்த கேள்விக்கு
திராவிட மாடல் குஜராத்தை வென்றது என்று தனியார் தொலைக்காட்சியின் நிருபர் கேட்டதற்கு, குஜராத் மாடலை திராவிட மாடல் வெல்லவில்லை, திராவிட மாடல் என்று சொல்லக்கூடியது பொய்யான செய்தி. சிஎஸ்கே வில் தோனி இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், சிஎஸ்கேவில் ஒரு தமிழர் கூட இல்லையென்றாலும் நமக்கு சிஎஸ்கேவை பிடிக்கும். ஆனால் குஜராத் அணியில் மூன்று தமிழர்கள் விளையாடினர், கடைசி பாலில் 6,4 அடித்தது ஜடேஜா அவரது மனைவி பிஜேபி எம்எல்ஏ, ஜடேஜாவும் பிஜேபியின் காரிய கர்த்தா, 2024லும் இதுதான் நடக்கப்போகிறது. சிஎஸ்கே தோனிக்காக வென்றது, வெற்றி பெற்ற கோப்பையை கொண்டு வந்து பெருமாள் சன்னதியில் வைத்து பூஜை செய்தனர்.
மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு:
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நக்கீரர் கூறியதற்கு காரணம் எந்த குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும் என்பதுதான், வழக்குப்பதிவு செய்யப்பட்டது, விசாரணை நடைபெறுகிறது. ஆனால் கைது செய்தே ஆக வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, கவிப்பேரரசு வைரமுத்து மீது 19 குற்றச்சாட்டுகள் உள்ளது அவர் முதல்வருடன் இருக்கிறார், அந்தப் பாடகி பல மாதங்களாக பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் ஒரு வழக்குப்பதியப்படவில்லை விசாரணை நடைபெறவில்லை. ஆனால் தமிழக பாஜக வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கூறினால் அது தவறு. பதக்கத்தை கங்கையில் போடுவேன் என்று கூறுவது, உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் யார் மீது நம்பிக்கை வரும்.
நடை பயணம் துவக்குவது குறித்த கேள்வி
ஜூலை 9ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளோம். ராமேஸ்வரத்தில் இருந்து தூங்குகிறது தேசிய தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
ஆடியோ விவகாரத்தில் பிடிஆர் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு
பிடிஆர் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை. அவர் ஒரு ஆதாரம் தான். தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார். அதை அவர் மறுக்கலாம். ஆனால் அவர் துறையை மாற்றி இருப்பது திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டாலும் நடக்கலாம் என்பதுதான் எடுத்துரைக்கிறது. பிடிஆருக்கும் எங்களுக்கும் கருத்தியல் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் படித்தவர் என்கிற பெருமை இருக்கிறது பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் என்று பெருமை இருந்தது. ஆனால் இன்று முதல் குடும்பத்தை பற்றி சொல்லிவிட்டார் என்பதற்காக நீக்கி உள்ளார்கள் என்றால் நிச்சயமாக மதுரை மண்ணுக்கு திமுக செய்துள்ள மாபெரும் துரோகமாக பார்க்கிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ரைடு விவகாரம் குறித்த கேள்விக்கு
முதல் முறையாக இந்த வெட்கக்கேடான சம்பவத்தை தமிழகத்தில் பார்க்கிறோம். வருமானத்துறை அதிகாரிகளை தாக்கி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கரூர் துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் போன்ற திமுக பிரதிநிதிகள். இதுபோன்ற ரவுடிகளை வேட்பாளராக அறிவித்து ஜெயிக்க வைத்து ரவுடிசம் செய்வது தான் திமுகவில் திராவிட மாடல். இது வருமானவரித்துறை அதிகாரிகள் மீதான சவால், அவர்கள் மீது தாக்கி இருக்கிறார்கள் என்றால் எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்பட மற்றும் என்ற தைரியம் தான். இந்த விவகாரத்தில் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களா?.
உக்ரைன் மற்றும் சூடானில் படித்த மருத்துவ மாணவர்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களை இந்தியாவிற்குள் மாற்ற வேண்டும் என்றால் மாநில அரசு தயாராக இருக்க வேண்டும். அதன் பிறகு மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். உக்ரைனை பொறுத்தவரை இன்னும் சில வருடங்களுக்கு மாணவர்கள் திரும்பி செல்ல முடியாது, இது முள் மீது பட்ட சேலை போல இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம் அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு
முதல்வர்கள் வெளிநாடு செல்வது வரவேற்க வேண்டிய விஷயம், அவர் மட்டும் செல்லவில்லை. அதிகாரிகளும் சென்றுள்ளனர். ஆனால் இந்த பயணம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், அவர் தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவை அடையாளப்படுத்த சென்றுள்ளார், பிரதமர் மோடியின் அடையாளமான இந்தியா தற்போது முதலீட்டை ஈர்க்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடி தான் இதை வைத்துக் கூட முதலீட்டை ஈட்ட முடியவில்லை என்றால் வேறு எதையும் செய்ய முடியாது. முதல்வர் எந்த முதலீட்டை ஈர்க்கிறார் என்பதை காண நாங்களும் ஆவலோடு இருக்கிறோம். உத்திரபிரதேச மாநிலம் ஜனவரி மாதம் சென்னை வந்து ரூட் ஷோ நடத்தி 10,000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து தரப்பட்டது. ஆனால் முதல்வர் ஜப்பான் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பத்தாயிரம் கோடி ஆவது சமன் செய்வாரா என்று நான் பார்க்கிறேன்.
செங்கோல் விவகாரத்தில் ராகுல் காந்தி பேசியிருப்பது குறித்த கேள்விக்கு
ராகுல் காந்தி இன்று சன் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் செங்கோலை படுக்க வைத்திருந்தார்கள், நிற்க வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். நேரு வம்சாவளியில் வந்த ராகுல் காந்தி செங்கோலை அவமானப்படுத்தியுள்ளார், ஆதீனத்தை அவமானப்படுத்தியுள்ளார், அதுவும் அமெரிக்க மண்ணில் அவமானப்படுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டை தடை செய்து அவமானப்படுத்தியது போல, இன்று செங்கோலையும் அவமானப்படுத்தியுள்ளார்கள். மேகதாது அணை கண்டிப்பாக கட்டப்படும் என சிவகுமார் சொல்லியுள்ளார், தமிழக காங்கிரஸ் கட்சியை பார்த்து கேட்கிறேன் அவர்களுக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் உள்ளதா, பாஜக இந்த பிரச்சனையை டெல்லி வரை எடுத்துச் சென்று மேகதாது அணை கட்டப்படாது என்று அமைச்சரையே சொல்ல வைத்தோம். கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது கட்டுவோம் என்று சொல்லி இருந்தும் பதவி ஏற்பு விழாவுக்கு முதல்வர் சென்றார். அங்கு அவரை பின்னாடி தள்ளி அவமானப்படுத்தினார்கள். ஆனால் மேகதாது அணை உறுதியாக கட்டுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள் இந்த விவகாரத்தில் முதல்வர் கண்டன குரல் கொடுப்பாரா என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் சிவக்குமாரை எதிர்க்க நாங்கள் கிளம்பி செல்வோம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion