”வெளிநாட்டில் வேலை” மோசடி கும்பல் ஜாக்கிரதை.. மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
”தமிழ்நாட்டு இளைஞர்கள் சட்டவிரோத பண மோசடி செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட மறுக்கும் இளைஞர்களை அக்கும்பல் துன்புறுத்துகிறது” - ஆட்சியர் எச்சரிக்கை.
இளைஞர்களுக்கு அதிக சம்பளம் என ஆசைவார்த்தை காட்டி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்து வருவதாகவும், மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை.
ஏமாற்றப்படும் வெளிநாட்டு பயணம்
உள்ளூரில் வேலை வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என்று வெளிநாட்டிற்கு சென்றால் அதிகளவு சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் எல்லோருக்கும் நல்ல வேலையும், சூழலும் சரியாக அமைவது இல்லை. சிலர் அங்கு வறுமையிலும் மாட்டிக் கொள்கின்றனர். பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு தங்களது மகனை மீட்க வேண்டும், கணவரை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, கண்ணீர் வடிக்கும் சூழல்தான் உள்ளது.
இந்நிலையில் இளைஞர்களுக்கு அதிக சம்பளம் என ஆசை வார்த்தை காட்டி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்து வருவதாகவும், மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்...,”கம்போடியா, தாய்லாந்து, மியான்மார் ஆகிய நாடுகளில் பண மோசடி நடைபெற்று வருவதாகவும், அதில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் கற்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பண மோசடி வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அதிக சம்பளம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் சட்டவிரோத பண மோசடி செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட மறுக்கும் இளைஞர்களை அக்கும்பல் துன்புறுத்துகிறது, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் வழியாகவும், விசா, பணி ஒப்பந்தம் உள்ளிட்ட விபரங்களை முழுமையாக தெரிந்து கொண்டும், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறையில் விசாரணை செய்து கொண்டும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் இது போன்ற வேலைகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவி தேவை என்றால் 18003093793, 8069009901, 8069009900 ஆகிய தொடர்பு எண்ணங்களின் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?