புனித உத்திரியமாதா ஆலய திருவிழாவில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்
திண்டுக்கல் கொசவபட்டி புனித உத்திரியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதி மொழி ஏற்கப்பட்டு இன்று காலை துவங்கியது.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர்,யாதவர் மக்களிடம் ஏறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குல பெண். 50 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த 'சல்லி காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது.
தமிழர்களின் மிகவும் முக்கிய விசேஷமான பொங்கல் திருநாள் என்றாலே கரும்பு, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் முதன்மையாக நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே. அதுமட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் கொசவபட்டி புனித உத்திரியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதி மொழி ஏற்கப்பட்டு இன்று காலை துவங்கியது.
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பின்னர் அந்த நபர் செய்த காரியம்! வேலூரில் பரபரப்பு
சாணார்பட்டி அருகே உள்ள கொசவப்பட்டியில் ஆண்டுதோறும் புனித உத்திரியமாதா ஆலய திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பட்டு சேலை, அண்டா, வேட்டி, துண்டு ஆகிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் திண்டுக்கல், பழனி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்க 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுகிறது. 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மாடுகளை பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். 6க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதுவரை மாடுபிடி வீரர் உட்பட 3 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





















