மேலும் அறிய
Advertisement
தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: வட்டாட்சியர் பணியிடமாற்றம் - மதுரை ஆட்சியர் உத்தரவு
மதுரையில் நேற்று நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் - கவனக்குறைவாக இருந்ததாக மதுரை தெற்கு வட்டாட்சியர் பணியிடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத்தேர்வு நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களுக்களை நிரப்புவதற்கான தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத் தேர்வு நடைபெறுகிறது.
— arunchinna (@arunreporter92) December 4, 2022
Further reports to follow @abpnadu #madurai | @SRajaJourno pic.twitter.com/ZsnoR77pKh
நேற்று முன்தினம் திடிரென நள்ளிரவில் கிராம நிர்வாக உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வுமையத்தில் உள்ள ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான விடைத்தாளை சிலர் சமூகவலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு விடைத்தாள்களை பெற 10 ஆயிரம் ரூபாய் கேட்டும் அனுப்படுவதாக கூறி சமூகவலைதளங்களில் விடைத்தாள்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஆங்கில திறனறி தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த மதுரை தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தெற்கு வட்டாட்சியர் பொறுப்பு தாசில்தாராக முத்துப்பாண்டி என்பவரை நியமித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion