ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
சாலை விரிவாக்கம் செய்ய, தங்களது கோயில் அருகே உள்ள இடத்தை 5 லட்சத்திற்கு கோயில் நிதியிலிருந்து வாங்கி அகலப்படுத்தும் பணிக்காக வழங்கியுள்ளனர்.
உசிலம்பட்டி நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 7 லட்சம் மதிப்பீட்டில் தங்கள் பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்து வரும், பொதுமக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நான்கு மாவட்டம் சந்திக்கும் உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. புறவழிச் சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சமயம் மதுரை ரோட்டிலிருந்து வரும் கனரக வாகனங்களை தவிர்த்து 108 ஆம்புலென்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் 7-வது வார்டு பாண்டிக் கோயில் வழியாகவும், கவணம்பட்டி வழியாகவும், தேனி மற்றும் பேரையூர் சாலைக்கு வரும் பிரதான சாலையாக உள்ளது.
பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை
இந்த சாலையை மேலும் விரிவாக்கம் செய்தால் 108 வாகனமும், கார்களும் நெரிசல் இல்லாமல் செல்ல வழி ஏற்படும் என்பதை உணர்ந்த இந்த பாண்டிக் கோயில் பகுதி பொதுமக்கள். தங்களது கோயில் அருகே உள்ள இடத்தை 5 லட்சத்திற்கு கோயில் நிதியிலிருந்து வாங்கி அகலப்படுத்தும் பணிக்காக வழங்கியுள்ளனர்., இதே போல் அப்பகுதியின் 7வது வார்டு நகர் மன்ற உறுப்பினரான கலாவதியும், இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க 2 லட்சம் செலவில் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். போக்குவரத்து நெரிசலை குறைக்க 7 லட்சம் மதிப்பீட்டில் தங்கள் பகுதியில் உள்ள இடம் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைத்து சாலையை விரிவாக்கம் செய்து வரும், பொதுமக்களை உசிலம்பட்டி பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர்.
உசிலம்பட்டி மக்கள் பாராட்டு
இது குறித்து உசிலம்பட்டி பகுதி மக்கள் கூறுகையில் ”பாண்டிக்கோயில் இருக்கும் பகுதியில் விஷேச நாட்களில் அதிகளவு போக்குவரத்து ஏற்படும். இதனால் ஆம்புலன்ஸ் செல்வதற்கும் பெரும் பிரச்னையாக இருந்துள்ளது. இந்நிலையில் இதனை சரி செய்ய பாண்டிக்கோயில் பகுதி மக்கள் நல்ல முடிவு செய்து இடம் வாங்க கோயில் பணத்தையும், அப்பகுதி கவுன்சிலர் பணத்தையும் இணைந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். அதனை வைத்து சாலையை விரிவாக்க பணியும், மின்கம்பம் மாற்றி அமைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இது போன்ற செயல் பாரட்டை பெற்றுவருகிறது. சில இடங்களில் வசதிகள் கிடைக்கவில்லை, என்றால் மக்கள் சக்தி ஒன்றிணைந்து இது பணிகளை செய்துகொள்வது ஆரோக்கியமானது” என்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Muthu: “உதவி செய்யுங்க நிம்மதி ஏற்பட்டு நல்லா தூக்கம் வரும்”- மதுரை முத்துவின் நெகிழ்ச்சி பேச்சு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Palani Murugan Temple: அபாயத்தில் பக்தர்கள் சிக்கினால், மீட்பது எப்படி? - பழனி கோயிலில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை