மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய செய்திகள்..
மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு லட்சம் தீ ஏற்றப்பட்டது. இதனால் மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளம் ஜொலித்தது.
1. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்பவரின் மகன் மொட்டை என்ற சேக் உதுமான் (வயது21). இவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைப்பதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் அங்கிருந்த ஜன்னல் கம்பியை வளைத்து தப்பி ஓடிவிட்டார். கீழக்கரை உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் சேக்உதுமானை கைது செய்தனர்.
2. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முக்கிய நபரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர்.
3. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே கண்மாய் உபரி நீரைத் திறந்துவிடக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு லட்சம் தீ ஏற்றப்பட்டது. இதனால் மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளம் ஜொலித்தது.
5. தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் இன்று அறிவிக்கப்பட்டதன்காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,குணா குகை,பில்லர் ராக்,மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்ட நிலையில் நாளை (20-11-2021) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக- வனத்துறை அறிவிப்பு.
6. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பஸ் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு வந்ததையடுத்து, மேம்பாலத்தின் பக்கச்சுவர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3வயது சிறுவன் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். பாலத்தின் சுவரில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7. மதுரை ரயில்வே கோட்டத்தில், நவம்பர் 25 ஆம் தேதி முதல் வைகை, பல்லவன் உள்பட 5 ரயில்களில் முன்பதி வில்லாத பெட்டிகள் இணைக்கப் படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
8. மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் மதுரை அல் அமீன் தொடக்கப் பள்ளி மாணவர் அப்துல்லா முதலிடம் பெற்றுள்ளார்.
9. திண்டுக்கல்லில் பாலியல் தொல்லை கொடுப்பதாக சுரபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜோதிமுருகன் 42, விடுதி காப்பாளர் அர்ச்சனாவை 23, கைது செய்ய வலியுறுத்தி நர்ஸிங் கல்லுாரி மாணவிகள் மறியல் செய்தனர். ஜோதிமுருகன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.
10. மதுரையில் குண்டர் சட்ட கைது உத்தரவை எதிர்த்து 4 பேர் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion