அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும், நாக்கு துண்டாக்கப்படும் - செல்லூர் ராஜூ ஆவேசம்
”அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான்”.
மதுரை மாநகர் அ.தி.மு.க., தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி பந்தடி தெருவில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசுகையில்,"அண்ணா அவர்களையும், எம்.ஜி.,ஆர் அவர்களையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணா மீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டு இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப்படுத்துவார்.
கட்சியில் 26, 28-வது இடத்தில் இருந்தவர் டாக்டர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் குடும்பம் திமுகவை குடும்ப கட்சியாக வைத்துள்ளது. அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடுனதும், நான் தான் முதலமைச்சர் என்று சொல்கின்றனர். சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடியாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் ஏரியாவாக மாற்றுகின்றனர். உதயநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் கோயில், கோயிலாக செல்கின்றனர். ஆனால் உதயநிதி சிறுபான்மையினர் ஓட்டு வாங்க சனாதானத்தை பற்றி பேசிவருகிறார். அமைச்சர் பி.டி.ஆர்., பொருளாதார நிபுணர் என முதல் மாதம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் ஊழல் தொடர்பான ஆடியோ ரிலீஸ் ஆனவுடன் அவருடைய பதவியை டி-புரோமோட் செய்துவிட்டார். தக்காளி விலையை கூட கட்டுப்படுத்த முடியாத வக்கற்ற அரசாக தான் தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. விலைவாசியை உயர்த்திவிட்டு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார், முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் கஞ்சா மிட்டாய் விற்கப்படுகிறது. அதை வாயில் வைத்துக் கொண்டு பள்ளி மாணவர்கள் தள்ளாடுகின்றனர். எம்.ஜி.ஆர்., பெயரை கூட மறந்துவிடுவோம், ஆனால் அண்ணாவின் பெயரை மறக்கமுடியாது. அவரின் பெயரை தான் எங்கள் கட்சிக்கே வைத்துள்ளோம்.
அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு தான் உரிமை உண்டு. திமுகவினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறார். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான்.
நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மத்தாப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும். பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு காரணம் பெரியார், அண்ணா அவர்கள் தான். அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை திமுக மூடுவிழா கண்டுவருகிறது. அண்ணாவின் வாரிசு நாம் தான்” என பெருமிதம் கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் முன்பு பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை உத்தரவு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்.." அமேசான் அதிரடி அறிவிப்பு..! வாடிக்கையாளர்களே படிங்க..