புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
நாடு முழுவதும் புத்தாண்டு பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வர்த்தக சமையல் சிலிண்டர் விலை 110 ரூபாய் அதிகரித்துள்ளது.

வர்த்தக சமையல் சிலிண்டர் விலை உயர்வு
உலகம் முழுவதும் புத்தாண்டு வரவேற்று மக்கள் கொண்டாடி வரும் நிலையில், புத்தாண்டின் தொடக்கமான ஜனவரி 1, 2026 அதிகாலையிலேயே ஷாக் கொடுக்கும் வகையில் 19 கிலோ கொண்ட வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்த்தப்பட்டு 184.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான IOCL, BPCL, HPCL இந்த உயர்வை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வால் இது ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் விடுதிகளில் வணிக பயன்பாட்டுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரம் வீட்டு உபயோக 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வர்த்தக சிலிண்டர்-110 ரூபாய் அதிகரிப்பு
இந்தியாவில் வர்த்தக LPG விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றமானது இது சர்வதேச எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது ஏற்றம் இறக்கம் காண்கிறது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி 5 ரூபாய் குறைக்கப்பட்டு 1,590.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு 1,580.50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் புத்தாண்டின் தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வர்த்தக சிலிண்டர் விலை 111 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





















