மதுரையில் வெளுத்து வாங்கிய மழை, சாலைகளில் வெள்ளப்பெருக்கு - ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்!
மதுரை மாநகரின் சில தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது.
![மதுரையில் வெளுத்து வாங்கிய மழை, சாலைகளில் வெள்ளப்பெருக்கு - ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்! Heavy rain in Madurai floods the roads vehicles covered in rainwater மதுரையில் வெளுத்து வாங்கிய மழை, சாலைகளில் வெள்ளப்பெருக்கு - ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/5cf29067d485e39327822a9a22a03d3b1697940982604184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
#madurai | தொடங்கிய வடகிழக்கு பருவமழை மதுரையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு - மழைநீரில் ஊர்ந்துசென்ற வாகனங்கள்.#RainyDays | @SRajaJourno | @arunavijay1970 | @imanojprabakar | @JSKGopi | @ChennaiRains | @SuVe4Madurai | @ramaniprabadevi | pic.twitter.com/mvtKan8vy3
— arunchinna (@arunreporter92) October 22, 2023
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:
மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல் வரும் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்துசென்றது. இரவில் தொடர்ந்து லேசான மழையும் இருந்ததால் மதுரை ஜில்லென மாறியுள்ளது.
![மதுரையில் வெளுத்து வாங்கிய மழை, சாலைகளில் வெள்ளப்பெருக்கு - ஊர்ந்துசெல்லும் வாகனங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/c6150b7a8a17ab25748210f6cea017e71697940931758184_original.jpeg)
மதுரையில் கொட்டித் தீர்த்த மழை:
அரபிக்கடல் பகுதிகள்:
22.10.2023 முதல் 24.10.2023: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 110 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.10.2023: மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)