மேலும் அறிய
Video : ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் : மதுரையில் திருமண விழாவில் சுவாரஸ்யம்
மணமகன், மணக்கோலத்தில் ட்ரம்ஸ் இசைத்த சுவாரசிய சம்பவத்தினை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பார்த்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ட்ரம்ஸ் வாசித்த மணமகன்
திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன்...! வியப்படைந்த மணமகள் - மதுரையில் திருமண விழாவில் நடந்தேறிய சுவாரஸ்யம்.
மதுரையில் நடைபெற்ற சுவாரஸ்யம்
மதுரை கிரைம்பிரான்ஞ்ச் பகுதியை சேர்ந்த பட்டதாரிகளான மகேஷ் குமார் மற்றும் யுவராணி திருமண ஜோடிக்கு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்த பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, திருமண விழாவில் இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென மணக்கோலத்தில் இருந்த மணமகன் மாலையுடன் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து இசை கச்சேரி நடைபெற்ற பகுதிக்கு சென்று, டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார்.
மணக்கோலத்தில் சென்ற மணமகன்
இதனை பார்த்து வியப்படைந்த மணப்பெண் அதே மணக்கோலத்தில் இசைக்கச்சேரி மேடைக்கு சென்று, ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டிருந்த மணமகன் அருகே நின்றபடி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன், மணக்கோலத்தில் ட்ரம்ஸ் இசைத்த சுவாரசிய சம்பவத்தினை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பார்த்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மணமக்கள் உறவினர்கள் நெகிழ்ச்சி
இது குறித்து மணமகன் உறவினர்கள் சிலர் நம்மிடம்...,” மகேஷ் குமார் - யுவராணி மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. மகேஷ் குமாரிக்கு அடிப்படையிலேயே எல்லா துறைகளில் ஆர்வம் உள்ளது. தங்களுடன் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார். இந்த நிலையில் தான் அவரது திருமணத்தில் ட்ரம்ஸ் வாசித்து காண்பித்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மணக்கோலத்தில் கச்சேரி மேடையில் ட்ரம்ஸை இசைத்து காண்பித்தார். இது வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மணமகள் யுவராணிக்கும் தனது கணவர் ட்ரம்ஸ் வாசித்தது மிகவும் பிடித்தது. மகிழ்ச்சி பொங்க கைகொடுத்து வாழ்த்தினார். எல்லோருக்கும் அவர்களத்து திருமணத்தில் சில மறக்க முடியாத நினைவுகள் இருக்கும். அதைப் போல் மணமக்கள் மகேஷ் குமார் - யுவராணி தம்பதிக்கு இந்த இனிமையான நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று மகிழ்ச்சிபட தெரிவித்தார்.
View this post on Instagram
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bakrid 2024 : களைகட்டும் பக்ரீத் பண்டிகை ஏற்பாடுகள்.. திருப்புவன சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஜோர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion