மேலும் அறிய

Vikravandi By Election: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா.. வேட்பாளரை அறிவித்த திமுக..!

Vikravandi By Election: விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 10ம் தேதி விக்ரவாண்டியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், தேர்தல் ஆணையம் தேதியை வெளியிட்ட மறுநாளே அதிரடியாக வேட்பாளரை அறிவித்தது திமுக. அதன்படி, விக்ரவாண்டியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நேற்று முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

என்னென்ன விதிகள் கடைபிடிக்கப்படும்..?

  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக்கூடாது உடனடியாக அவற்றினை அகற்றிட வேண்டும்.
  • அரசியல் கட்சியினை சார்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் அகற்றிட வேண்டும். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இறந்துபோன தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையேதுமில்லை.
  • தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும்.
  • துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
  • இரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், இரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளூர் அமைப்புகளில் கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சுவர் எழுத்து, சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவை 48 மணி நேரத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள், நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம் வைக்கப்பட்டிருப்பின் அவற்றினை 72 மணி நேரத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • அலுவலக வலைதளத்தில் அரசியல் சாதனை விளக்கும் யாதொரு விளம்பரம், அரசு/ மின்னணு ஊடகத்திலிருந்து நீக்கிடவும், அரசியல் சார்ந்த பொறுப்பாளர்களின் புகைப்படம், அமைச்சர்கள், அரசியல் கட்சிகள் பற்றி மத்திய/ மாநில அரசு அலுவலக வலைவளத்திலுள்ள அனைத்து குறிப்புகளும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • அரசின் திட்டங்களுக்காக புதிய நிதி ஒப்பளிப்பு மேற்கொள்ளப்படக்கூடாது. முழுமையாக நிறைவடைந்த பணிகளுக்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களின் முழு திருப்தியுடன் நிதி அளிப்பதற்கு எவ்வித தடையுமில்லை, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை அரசு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget