மதுரை : வெள்ளிக் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் உலா.. பரவசத்தில் பக்தர்கள்..
வடக்காடி மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் வெள்ளி கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடி முளைக் கொட்டுத் திருவிழா என்பது பிரசித்தி பெற்றதாகும் அதன்படி இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்