மேலும் அறிய
Sivagangai: விவசாயிடம் கூடுதலாக ரூ.10 வாங்கிய தனியார் நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு மாதத்துக்குள் அந்த தொகையை வழங்காத பட்சத்தில் 9 சதவீத கூடுதல் வட்டி தொகையாக சேர்த்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
![Sivagangai: விவசாயிடம் கூடுதலாக ரூ.10 வாங்கிய தனியார் நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Action decision to return Rs. 30,010 to the private company that bought additional Rs. 10 from Sivagangai farmer TNN Sivagangai: விவசாயிடம் கூடுதலாக ரூ.10 வாங்கிய தனியார் நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/8f6eebb62d3c547ecddfd9d5d1a49ea21689741158189184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விவசாயி துரைப் பாண்டி
ஹேர் டைக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கிய தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 30,010-யை அழகநாச்சிப்புரத்தை சேர்ந்த விவசாயிக்கு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள அழகநாச்சிப்புரம் பகுதியை சேர்ந்த விவசாயி துரைப் பாண்டி. இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஒரு வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு தி.நகர் பகுதியில் உள்ள தனியார் மாலில் ஹேர் டை ஒன்று வாங்கி உள்ளார். அந்த ஹேர் டை யின் விலை 29 மட்டுமே குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் 39 ரூபாய் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#sivagangai | ஹேர் டைக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரத்து 10-யை சிவகங்கை அழகநாச்சிப்புரத்தை சேர்ந்த விவசாயிக்கு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயி மகிழ்ச்சி......! pic.twitter.com/0WfbHadANk
— arunchinna (@arunreporter92) July 19, 2023
ஏன் என்று விவசாயி துரைப் பாண்டி அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் கேட்டபோது அந்த விவசாயியை அவமரியதையாக பேசியுள்ளார். பின்பு மன உளைச்சலில், சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை 21.12.2022ல் நாடியுள்ளார் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர் குட்வின் சாலமோன் ராஜ் விசாரனைசெய்து வந்த நிலையில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அந்த தீர்ப்பில், ஒரு ஹேர் டைக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.25000 அபராதம். மேலும் வழக்கு செலவு தொகையாக 5000 மற்றும் அந்த விவசாயி இடம் பெற்ற கூடுதல் தொகையான பத்து ரூபாயையும் சேர்த்து 30 ஆயிரத்து பத்து ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளனர். இரண்டு மாதத்துக்குள் அந்த தொகையை வழங்காத பட்சத்தில் 9 சதவீத கூடுதல் வட்டி தொகையாக சேர்த்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு சிவகங்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion