அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு !
அவனியாபுரம் தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பிரதான ஜல்லிக்கட்டு நலச்சங்கத்திற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இதில் தை முதல்நாளில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினரியே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 3 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்திவந்தது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















