IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் குறிவைக்க வாய்ப்புள்ள உத்தேச வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகப்படியான கையிருப்பை கொண்டுள்ள அணிகளாக கொல்கத்தா மற்றும் சென்னை களமிறங்குகின்றன.
ஐபிஎல் 2026 மினி ஏலம்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகம் தங்களது ப்ளேயிங் லெவனை வலுவாக கட்டமைக்க இன்றைய நாளை மிக முக்கியமானதாக கருதுகின்றன. குறிப்பாக அதிகப்படியான கையிருப்பை கொண்டுள்ள கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள், பல கோடிகளை கொட்டி சில வீரர்களை தங்கம் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணிக்குமான தேவை என்ன? எந்த வீரரை குறிவைத்து ஏலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒவ்வொரு அணியும் குறிவைக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏற்கனவே வலுவான ப்ளேயிங் லெவனை கொண்டுள்ளது. தர்போது பேக் -அப் வீரர்களை மட்டுமே குறிவைக்க அதிக வாய்ப்புள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த டாப் - ஆர்டர் வீரர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அடங்கலாம்.
ஹிட்-லிஸ்ட்: வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், டேவிட் மில்லர், ராகுல் சாஹர், ப்ரித்வி ஷா
கையிருப்பு: ரூ.16.40 கோடி
2. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
சென்னை அணி ஜடேஜா மற்றும் சாம் கரனின் ட்ரேடால் லோயர் மிடில் ஆர்டரில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப தீவிரம் காட்டுகிறது. அதன்படி ஒரு நட்சத்திர இந்திய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் பிரதான இலக்குகளாக இருக்கலாம்.
ஹிட்லிஸ்ட்: லியாம் லிவிங்ஸ்டோன், ரவி பிஷ்னோய், மதீஷா பத்திரனா, மாட் ஹென்றி. பிரசாந்த் வீர்
கையிருப்பு: ரூ. 43.40 கோடி
3. மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பட்ஜெட்டுடன் மினி ஏலத்தில் களமிறங்குகிறது. ஏற்கனவே வலுவான ப்ளேயிங் லெவன் இருப்பதால், வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரியான் ரிக்கெல்டனுக்கான மாற்று வீரரே அவர்களது முன்னுரிமையாக இருக்கும்.
ஹிட்லிஸ்ட்: ஜானி பேர்ஸ்டோ, குயின்டன் டி காக் , ஃபின் ஆலன் , சலில் அரோரா , சர்பராஸ் கான்
கையிருப்பு: ரூ. 2.75 கோடி
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதிகப்படியான வீரர்களை வெளியேற்றிய கொல்கத்தா அணி ஒரு டாப்-ஆர்டர் வெளிநாட்டு விக்கெட்-கீப்பர் பேட்டர், ஒரு மிடில்-ஆர்டர் நட்சத்திரம், ஒரு ஃபினிஷர் மற்றும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை குறிவைக்கிறது. கேப்டன் பதவிக்கான போட்டியாளரையும் தேடலாம்.
ஹிட்லிஸ்ட்: கேமரூன் கிரீன் , மதீஷா பத்திரனா, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டஃபி , கார்த்திக் ஷர்மா
கையிருப்பு: ரூ. 64.30 கோடி
5. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிச்சயமாக ஒன்று அல்லது இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களையும் இந்திய ஃபினிஷர்களையும் தேடும். ஹென்ரிச் கிளாசன் போன்ற நட்சத்திரங்களுக்கு பொருத்தமான மாற்று வீரர்களையும் தேடக்கூடும் ,
ஹிட்லிஸ்ட்: கார்த்திக் ஷர்மா, ஔகிப் தார், வெங்கடேஷ் ஐயர், சலில் அரோரா, ரவி பிஷ்னோய்
கையிருப்பு: ரூ. 25.50 கோடி
6. ராஜஸ்தான் ராயல்ஸ்
ஹசரங்கா மற்றும் தீக்ஷனா ஆகிய இருவரையும் விடுவித்துள்ளதால், ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்ய ராஜஸ்தான் தீவிரம் காட்டும். தொடர்ந்து இந்திய அல்லது வெளிநாட்டு நட்சத்திர பேட்ஸ்மேனும் அவர்களின் ரேடாரில் இருக்கலாம்.
ஹிட்லிஸ்ட்: ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், ராகுல் சாஹர், மைக்கேல் பிரேஸ்வெல் , டேவிட் மில்லர்
கையிருப்பு: ரூ. 16.05 கோடி
7. குஜராத் டைட்டன்ஸ்
ஷெர்பேன் ரூதர்ஃபோர்டை மும்பை அணிக்கு ட்ரேய் செய்த குஜராத், மிடில் ஆர்டருக்கான அதிரடியான வெளிநாட்டு வீரரைத் தேடும். ககிசோ ரபாடாவின் காய சூழலை கருத்தில் கொண்டு, ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரையும் தேர்வு செய்யலாம்.
ஹிட்லிஸ்ட்: டேவிட் மில்லர், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிங்ஸ்டோன், லுங்கி நிகிடி , கூப்பர் கோனொலி
கையிருப்பு: ரூ. 12.90 கோடி
8. பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியின் முதன்மை தேர்வாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஷ் இங்கிலிஸுக்கான மாற்றாகும். தொடர்ந்து மேக்ஸ்வெல்லுக்கு மாற்றாக ஒருவரையும் தேடலாம் .
ஹிட்லிஸ்ட்: ஜேமி ஸ்மித் , கூப்பர் கோனோலி, ஜானி பேர்ஸ்டோ, டேரில் மிட்செல் , ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்
கையிருப்பு: ரூ. 11.50 கோடி
9. டெல்லி கேபிடல்ஸ்
ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் இருவரையும் விடுவித்த பிறகு , வெளிநாட்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் டெல்லி விருப்பப்பட்டியலில் முன்னணியில் உள்ளனர். அதன்படி வெளிநாட்டு மிடில் ஆர்டர் ஹிட்டர்களையும் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரும் அவர்களின் பட்டியலில் இருக்கலாம்.
ஹிட்லிஸ்ட்:: டேவிட் மில்லர், ஜேமி ஸ்மித், குயின்டன் டி காக், சிமர்ஜீத் சிங்
கையிருப்பு: ரூ. 21.80 கோடி
10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சென்னையை போல லக்னோவும் ஒன்று அல்லது இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஃபினிஷர்களை எதிர்பார்க்கிறது. டேவிட் மில்லரை வெளியேற்றி அதிக பணம் சம்பாதித்துள்ளதால், அவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் தேடலாம்.
ஹிட்லிஸ்ட்: லியாம் லிவிங்ஸ்டோன், கார்த்திக் சர்மா, வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய், அபினவ் மனோகர்
கையிருப்பு: ரூ 22.95 கோடி




















