மேலும் அறிய

உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ

எங்க ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள். ஆனால் தி.மு.க., ஆட்சியில் டி.எஸ்.பி.,யை டீ வாங்கிட்டு வரசொல்லி அராஜகம் செய்வார்கள்- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது பைகாரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜா தான். ஆனால் எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கும் வகையில் ஆ.ராசா செயல்படுகிறார்.
 
உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ
இது போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் தி.மு.க., தலைவர் பாரா முகமாக அமைதியாக உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ள சுழலில் மேலும் இதனை பாதிப்படையும் வகையில் பேசி வருகின்றனர். ஆ.ராசா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்க்கிறார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறப்பு குறித்து தவறாக பேசினார். தற்போது இப்படி பேசியுள்ளார். எனவே ஆ.ராசாவுக்கு தி.மு.க., தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் தி.மு.க.,விற்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச மதிப்பாவது மிஞ்சும். விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட வற்றை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏன் முதல்வர் ஆ.ராசா விசயத்தில் வாய் மூடி மெளனியாக இருக்கிறார் என்று தெரியவில்லை.  இதுவே அதிமுகவினர் இப்படி பேசி இருந்தால் கடுமையாம நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும்.

உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ
2 ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை அவர் கொடுத்திருப்பார் போல அதனால் அவரை கண்டிக்க பயப்படுகின்றனர் என எண்ணுகிறேன். தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில் கூட ஒரு தாசில்தாரை தி.மு.க., தொண்டரணியை சேர்ந்த நபர் செவ்வியை சேர்த்து அடித்தார். இது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள். எங்க ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள் ஆனால் தி.மு.க., ஆட்சியில் டி.எஸ்.பி.,யை டீ வாங்கிட்டு வரசொல்லி அராஜகம் செய்வார்கள். இது போன்ற சம்பவம் தி.மு.க., வந்தால் எப்போதும் மாறாது. தி.மு.க., ஆட்சிக்கு ஸ்டாலின் ஆட்சி வந்தாலும், உதயநிதி வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும்.

உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ
 
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்துகொண்டது தொடர்பான கேள்விக்கு
 
இதை ஆ.ராசாவிடம் தான் கேட்ட வேண்டும். அதே போல் ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர், ஊராக கோயிலுக்கு செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார். இதற்கெல்லாம் ஆ.ராசா என்ன சொல்வார். இவர்கள் எல்லாம் என்ன விபச்சாரிகளின் பிள்ளைகளா என்ன? எதையும் தாங்கும் இதை வேண்டும் என அறிஞர் அண்ணா சொன்னார். இதையெல்லாம்  தாங்கும் இதயம் தான் ஸ்டாலினின் உள்ளது போல !

உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ
 
முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்கு
 
ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் இருக்கா என தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் கட்டபஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. அதே போல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் அருகே போதை பொருட்கள் விற்பனை அதரித்துள்ளதாக மதுரையில் நீதிபதியிடமே புகார் வந்துவிட்டது. அதனை நீதிபதி தலைமையில் முதல்வர் அமைத்த குழுவே குற்றம்  சொல்கிறது. இது  வெக்கக்கேடானது. இதையும் மூடி மறைக்கிறார் முதல்வர். இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை" என்று ( கண்ணீர் வடிப்பது போல் கிண்டல் அடித்தார்.)
 
"இந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சீருடை கூட சரியில்லை. அது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பே நடந்துவிட்டது.

உதயநிதி முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் இதே நிலைதான் நீடிக்கும் - செல்லூர் கே.ராஜூ
 
தென்காசி பாஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய பாகுபாடு குறித்த கேள்விக்கு
 
இது ஒரு அருவெருக்கப்படும் சம்பவம். தமிழகம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது. அண்ணன், தம்பி போல பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் செயல்படுகிறது. அவையெல்லாம் அகதிகளாக போய்விட்டனரா ? கே.பாலகிருஷ்ணன், திருமாவளன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன். வெளியூர்களுக்கு சென்றுவிட்டனரா ? தேர்தல் சீட்டுக்காக தி.மு.க.,விடம் அமைதியாக இருக்கின்றனர். தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Embed widget