மேலும் அறிய

தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

தேனியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த அதிகாரிகள் குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்ட விரோத பணபரிமாற்றம் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சங்கர். இவர் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தேனி அருகே உள்ள போடி இரட்டை வாய்க்கால் அருகில் ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக உள்ளார். இவர்களின் மகன் லோகேஷ் திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். சங்கர் நடத்தி வரும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

இந்த சூழலில்,  கேரள பதிவெண் கொண்ட காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வந்தனர். அவருடன் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை தந்த நிலையில், குடோனில் ஒட்டி இருந்த வர்த்தக நிறுவனம் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து பூட்டை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். குடோனுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. திமுக நிர்வாகி சங்கரின் வீடு அலுவலகம், ஆகிய இடங்களுக்கும் அமலாக்கத்துறையினர் சோதனைக்காக சென்றனர். ஆனால் பூட்டிக்கிடந்ததால், திரும்பி குடோனுக்கே வந்துவிட்டனர்.

தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

அதேபோல, போடியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரியான சுந்தர் ராஜன், என்பவரது வீடு மற்றும் ஏலக்காய் விற்பனை கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏலக்காய் வர்த்தகம் செய்ததில், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த 7 மாதத்தில் ரூ.1,200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போடியில் கடந்த 4 ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற்றது என்று தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget