மேலும் அறிய

இல்லம் தேடி கல்வி என்பது மாறி, இல்லம் தேடி சாராயம் என்ற நிலை - எவிடன்ஸ் கதிர்

அ.தி.மு.க ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது , திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக, அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். - எவிடன்ஸ் கதிர் பேட்டி

எவிடன்ஸ் கதிர் பேட்டி
 
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள ஆய்வு அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களிடம்,” கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் 64பேர் உயிரிழந்துள்ளனர் இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்த போது நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்று இனி ஒரு சொட்டு கள்ளச்சாராய விற்பனை நடக்காது என கூறினார்.
 
ஆனால் இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம். கருணாபுரத்தில் காவல்நிலையம், கோர்ட், கலெக்டர் ஆபிஸ் அருகே விஷ சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. இந்த விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், எனவும், மருத்துவமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விஷ சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க மக்களை திசை திருப்புகின்றனர், தமிழகத்தில் 45ஆயிரத்தில் 862 கோடிக்கு டாஸ்மாக் வியாபாரம் நடைபெற்றுள்ளது. 54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம் - இதில் பட்டியலினத்தவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர்.  இறந்தவர்களின் பெண்களும் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். உயிரிழந்துவிடுவார்கள் என்ற நிலைமையில் உள்ள DARK RED ZONE ல் - அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
கள்ளச்சாரயத்தில் காவல்துறை லஞ்சம்
 
விஷ சாராயத்தில் உயிரிழந்தவர்களில் 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்துவருகின்றனர். இதில் 11. பெண் குழந்தைகள் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
கள்ளக்குறிச்சியில் மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கி சென்றுவந்துள்ளனர். 18-ம் தேதியே கள்ளசாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர்.
 
ஆனால் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளச்சாராய மரணம் இல்லை என்றார். தலித் மக்கள் அதிகமாக இருக்ககூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்துவருகின்றனர். 18-ம் தேதியே விஷ சாராயம் அருந்திய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர்.
 
அதிமுக ஆட்சியில் காட்டில் - திமுக ஆட்சியில் வீட்டில்
 
கள்ளக்குறிச்சியில் மாதவசேரியில் கோவிலில் வைத்து பூசாரி கள்ளச்சாராயத்தை விற்றுள்ளனர்.  இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பது போல் மாறிவிட்டது. தமிழ்நாடு உளவுத்துறைக்கு கள்ள சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால் புகார்தாரரை வீடு்தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிச் செல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டுவருகின்றது.
 
தமிழக அரசு கள்ள சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது. அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காக்தான் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுதொகை அளித்துள்ளனர். கள்ளச்சாராய மரண விவகாரத்தில் SC ST வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட முடியாது என SC ST மாநில ஆணையம் தெரிவிக்கின்றது. 
 
ஏற்கனவே குண்டாசில் இருந்த கோவிந்தராஜ் என்ற நபர் மூலமாக தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது. தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்படுகிறது. முதலமைச்சர் ஒரு சொட்டு விற்பனை ஆகாது என கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது,  எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனைக்குள் ICU வார்டுக்குள் அனுமதிக்கவில்லை , மரண விவரத்தை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை  காவல்துறையினர்  பின் தொடர்ந்து வருகின்றனர்.
 
அதிமுக ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது, திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்”. என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
Embed widget