வெள்ளைக்கார தாத்தாவின் நினைவு நாள்- முளைப்பாரி எடுத்து வந்து நன்றி செலுத்திய கிராமத்து மக்கள்.
இங்கிலாந்து வெள்ளைக்கார தாத்தா நினைவு நாளில் உருவ சிலையுடன் ஊர்வலம் நடத்தி முளைப்பாரி எடுத்து வந்து நன்றி செலுத்திய கிராமத்து மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்து தங்கள் ஊரில் தங்கி சேவை செய்து மறைந்த வெள்ளைக்கார தாத்தாவிற்கு அவரது உருவ சிலையுடன் ஊர்வலம் நடத்தி முளைப்பாரி எடுத்து வந்து நன்றி செலுத்திய கிராமத்து மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கிம்டன் கிறிஸ்தவ பாதிரியார் ஆன இவர் 1974 ஆம் ஆண்டு சேவை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி கிராமத்திற்கு வந்து தங்கி உள்ளார். அன்று முதல் சமூக ஆர்வலராக மக்களோடு மக்களாக கலந்து அவர்களது தேவைகளுக்காக சேவை செய்து வந்துள்ளார் . ஆர்.டி.யு என்ற நிறுவனத்தை நிறுவிய ஜேம்ஸ் கிம்டன் அதன் மூலம் அப்பகுதியில் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு போர்வல் அமைத்துக் கொடுப்பது என அந்த கிராமத்தை தத்தெடுத்து தன்னால் முடிந்த சேவைகளை ஜேம்ஸ் கிம்டன் செய்து வந்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினராக காணப்பட்ட ஜேம்ஸ் கிம்டனை ஜி.கல்லுப்பட்டி கிராம மக்கள் தாத்தா என்று அழைக்க தொடங்கினர்.
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
ஜாதி மதம் பார்க்காமல் அனைவரின் மனங்களின் நிறைந்த ஜேம்ஸ் கிம்டன் 2017 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். வெளிநாட்டில் இருந்து பிறந்து வந்து தங்கள் கிராமத்திற்காக வாழ்க்கை அர்ப்பணித்த வெள்ளைக்காரர் தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஜேம்ஸ் கிம்டனின் 7ம் ஆண்டு நினைவு நாளை சமத்துவ கொடை விழாவாக கொண்டாடினர்.
கிராமத்து தெய்வங்களுக்கு திருவிழா எடுப்பது போல் கிராமம் முழுவதும் ஆங்காங்கே மண்டக படிகளை ஏற்படுத்தியும், முளைப்பாரிகளை போட்டும் திருவிழா போல் ஏற்பாடுகளை செய்திருந்தனர் . நினைவு நாள் அன்று அலங்கரிக்கப்பட்ட மின்னலங்கார தேரிலும் பல்லக்கிலும் ஜேம்ஸ் கிண்டனின் உருவச் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர் . கிராமத்து பெண்கள் கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரிகளை ஊர்வலத்தில் எடுத்து வந்தனர் . கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களும் மலர் தூவி வரவேற்று ஜேம்ஸ் கிம்டன் உருவ சிலையை சுமந்து வந்தனர் .
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
இதனை தொடர்ந்து சமத்துவ கொடை விழா ஊர்வலம் இறுதியாக ஜேம்ஸ் கிம்டன் நினைவிடத்தில் முடிந்தது . அங்கு கிராமத்து பொதுமக்கள் தங்கள் நினைவஞ்சலியை நன்றியாக செலுத்தினர். மறைந்தாலும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக மனிதனை தெய்வமாக்கி மக்கள் நடத்திய இந்த சமத்துவ கொடை விழா அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.