தீபாவளிக்கு புதிய வரவாக பாப்கான் சட்டைகளுக்கு நல்ல வரவேற்பு - எங்கு தெரியுமா?
பல ஆண்டுகளாக தொடர்ந்து நத்தப்பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறேன்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை காலங்களில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், தருமபுரி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நத்தம் பகுதிக்கு வந்து அதிக அளவு ஆயத்த ஆடைகளை வாங்கி செல்வார்கள். தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு பிளைன், காட்டன், செக்கீடு, மோனோ காட்டன் சில்க் காட்டன் போன்ற சட்டைகள் எங்களிடம் கிடைக்கும், தற்போது தீபாவளியை முன்னிட்டு புதிய வரவாக பாப்கான், டிஜிட்டல் பிரிண்ட் சட்டைகள் விற்பனையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
SL Cricket Board: இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்னை என்ன? கூண்டோடு கலைக்கப்பட்டது ஏன்? மீண்டு வருமா?
இதனால், அந்த வகை சட்டைகளுக்கு அதிக அளவு ஆர்டர்கள் இந்தாண்டு வந்துள்ளது. நத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இருவருக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது தீபாவளியை முன்னிட்டு ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நத்தத்தை பொருத்தவரை 130 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உள்ள சட்டைகள் தயார் செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நத்தம் பகுதிக்கு ஆயத்த ஆடை பூங்கா அமைத்து தந்தால் இன்னும் உற்பத்தியும் அதிகரிக்கும் தொழிலாளர்கள் நலனும் காக்கப்படும். மேலும் தற்போது தீபாவளிக்கு ஆர்டர்கள் அதிக அளவு வந்துள்ளதால் நாங்களும் ஆயத்த ஆடையை சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து திருச்சியை சேர்ந்த வியாபாரி வாசுதேவன் என்பவர் கூறியதாவது, நான் கடந்த 30 ஆண்டுகளாக திருச்சி அருகே தத்தியேங்கர்பேட்டைபகுதியில் கடை நடத்தி வருகிறேன். நத்தம் பகுதியில் சட்டைகள் தரமாகவும் குறைந்த விலையில் எண்ணற்ற மாடல்கள் உள்ளன. அதனால் வாடிக்கையாளர்களிடம் அதிக அளவு நத்தம் பகுதியில் தயார் செய்யப்படும் சட்டைகளுக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 நாட்கள் 1870 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து நத்தப்பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறேன். மேலும் தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு புதிய வரவாக வந்துள்ள பாப்கான் சட்டைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நவம்பர் 5ஆம் தேதிக்குப் பின் கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியாது என்பதால் முன்னதாகவே தற்போது சட்டைகளை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.