மேலும் அறிய
Advertisement
தேவநேயப்பாவாணரின் பேத்தி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு; சொந்த ஊரில் உடல் அடக்கம்
மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மொழிஞாயிறு தேவநேய பாவணர் தமிழ்மொழி மற்றும் தமிழர்கள் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் மொழி ஆய்வாளராக திகழ்ந்த தமிழ்மொழி என்பது இயற்கையான மொழி எனவும், உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழே, திராவிட மொழிகளுக்குத் தாய் , ஆரியத்திற்கும் மூலம் தமிழ்மொழி என உரக்க சொன்னவர் மொழிஞாயிறு தேவநேய பாவணர். உலகத் தமிழ் கழகம் என்ற பெயரில் தனித்தமிழ் இயக்கம் ஒன்றை தொடங்க போராடி வெற்றி கண்ட மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் மணிமண்டபம் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது.
இதில் மணிமண்டப காப்பாளராக தேவநேயபாவணரின் பேத்தியான ஏ.எம்.டி.பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தேவநேய பாவாணர் மணிமண்டபத்தை அவருடைய பேத்தி சிறப்பாக நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 2ஆம் தேதி 57 வயதான பரிபூரணம் தண்டுவட பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகன்குளம் அகழ்வாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion