குடும்ப தலைவிகளுக்கு விரைவில் மாதம் ரூ.1000.. இப்போது தகவல் சேகரிக்கும் பணிகளில்.. - நிதியமைச்சர் கொடுத்த அப்டேட்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது - விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ. 1000 ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்கான விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்.#Madurai | @ptrmadurai | @CMOTamilnadu | @Act4madurai | #TamilNadu | @pmoorthy21 | @seranfilmmaker | @abpnadu .... pic.twitter.com/XvaFuCoY31
— Arunchinna (@iamarunchinna) June 15, 2022
எவ்வளவு விரைவில் ஊக்க தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.@mani9726 | @sapiens_2k | @MaduraiRafiq | @Naveenkumar2228 | @aaimduairport | @Act4madurai | @maduraites @UpdatesMadurai | @thangadurai887 | @hari_rs_jo
— Arunchinna (@iamarunchinna) June 15, 2022