மேலும் அறிய

Crime: பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் கலவரம்; 60 பேரை கைது செய்த போலீஸ் - தொடர் கண்காணிப்பு

பெரியகுளம் கலவரம் தொடர்பாக காவல் நிலையம் மீது கல்வீசி தாக்குதல், வாகனங்கள் உடைப்பு போலீசாரை தாக்கியது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி அன்று இரவு பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் இருந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர்.

தகராறு:

இதேபோல் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினரும் மாலை அணிவிக்க சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

RSS Rally: தமிழ்நாட்டில் இன்று நடக்கிறது ஆர்.எஸ்.எஸ். பேரணி..! பொதுக்கூட்டம் எங்கே? கட்டுப்பாடுகள் என்னென்ன?

Crime: பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் கலவரம்; 60 பேரை கைது செய்த போலீஸ் - தொடர் கண்காணிப்பு

வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. அதில் அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் அருகிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் தென்கரை தண்டுபாளையம் அருகே ஒரு  இரண்டு சக்கர வாகனம் தீ வைத்து  கொளுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சிலரை பிடித்து பெரியகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு  காவல் நிலையத்தின் முன்பு வாலிபர்கள் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் காவல் நிலையம் மீது சரமாரியாக கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ், இரண்டு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின.

Atiq Ahmad: போலீசார் முன்பே முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை..! உச்சபட்ச பதற்றத்தில் உத்தரப்பிரதேசம்..!144 தடை அமல்..!

Crime: பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் கலவரம்; 60 பேரை கைது செய்த போலீஸ் - தொடர் கண்காணிப்பு

போலீஸ் குவிப்பு:

இதையடுத்து பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்து மறித்து அதன் கண்ணாடியையும் உடைத்தனர். காவல் நிலையம் மீது கற்கள் வீசியதில் அய்யண சக்கரவர்த்தி, சுருளிவேல், சரவணன், சதாம் உசேன், கவாஸ்கர் ஆகிய 5 போலீசார் காயம் அடைந்தனர். பின்னர் போலீசாா் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி சென்று சிலரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாா்வையிட்டார். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட போலீசார் பெரியகுளத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

Crime: தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்கள்...! தந்தை உயிரிழந்த இடத்தில் மச்சானின் தலையை வெட்டி வைத்த கொடூரம்..!

Crime: பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் கலவரம்; 60 பேரை கைது செய்த போலீஸ் - தொடர் கண்காணிப்பு

60 பேர் கைது:

அவர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. பெரியகுளத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும் மாற்றுப் பாதையில் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பெரியகுளத்தில் உள்ள மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே காவல் நிலையம் மீது கல்வீசி தாக்குதல், பேருந்து, ஜீப், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு, போலீசாரை தாக்கியது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget