சாலையில் நடந்து சென்றவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்! அலறியடித்து ஓடிய மக்கள்!
அந்த வாலிபர் எரிந்த நிலையில் அங்குமிங்குமாக ஓடி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
திண்டுக்கல் நகர் பகுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திலிருந்து ஏ எம் சி சாலை வழியாக மணிக்கூண்டு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் புத்தாண்டு கேளிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் ஏஎம்சி சாலை ஸ்டாலின் காட்டேஜ் அருகே சாலையில் குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (35) என்பவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
Ayodhya Ram Statue: அயோத்தி கோயிலில் நீங்கள் தரிசிக்க போகும் ராமர் சிலை இதுதான்! சிறப்புகள் என்ன?
தீ பற்றி எரிந்ததைக்கண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் மேலும் அக்கம் பக்கத்தில் கடைகளில் இருந்தவர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். அந்த வாலிபர் எரிந்த நிலையில் அங்குமிங்குமாக ஓடி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதில் அந்த வாலிபர் பலத்த தீ காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து தீயில் கருகி உயிருக்கு போராடிய நபரை விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர் சதீஷ் என்றும் திண்டுக்கல் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சதீஷ் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த மர்ம நபர் யார்? எதற்காக இந்த இந்த சம்பவம் நடைபெற்றது? என்பது குறித்தும் மேலும் இப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சதீஷ் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். வாலிபர் ஒருவர் நடுரோட்டில் மக்கள் அதிகம் நடமாட்டம் இருந்த பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.