Morning Headlines: அயோத்தி கோயிலில் நீங்கள் தரிசிக்க போகும் ராமர் சிலை இதுதான்! கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லையா? முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- அயோத்தி கோயிலில் நீங்கள் தரிசிக்க போகும் ராமர் சிலை இதுதான்! சிறப்புகள் என்ன?
அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, மைசூரைச் சேர்ந்த சிற்பியின் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. வரும் 22ம் தேதி இந்த கோயில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது கோயில் கருவறையில் பிரதமர் மோடி குழந்தை ராமரின் சிலையை நிறுவ உள்ளார். இதற்காக மூன்று ராமர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அவற்றிலிருந்து ஒரு சிலையை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, கடந்த டிசம்பர் 30ம் தேதி நடைபெற்றது. மேலும் படிக்க..
- சபரிமலையில் நேற்று மட்டும் 95 ஆயிரம் பேர்; 5 கி.மீ வரை வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்! முக்கியமா இதை தெரிஞ்சிக்கோங்க!
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இதனை தவிர்த்து மாதந்தோறும் பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். மேலும் படிக்க..
- "காவல்துறை சித்ரவதை செய்யவா இந்த சட்டம்" - புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். புதிய குற்றவியல் சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க..
- கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லையா? மனம் திறந்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. கொலிஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை. மேலும் படிக்க..
- ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற செயற்கைக்கோள்! வீடியோ வெளியிட்டு வியப்பில் ஆழ்த்திய இஸ்ரோ!
பி.எஸ்.எல்.வி.சி. 58 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் படிக்க..