மேலும் அறிய
Advertisement
அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் அசத்தல் !
பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சேர்மன் மாணிக்கவாசகம் நடு நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியியான இங்கு தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு கல்வியோடு நாட்டு, நடப்பு, தொழிற்கல்வி, கலைத்துறை என்று பல்வேறு விசயங்களில் கற்றுக் கொடுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார். மாணவர்களுக்கு பிடித்த கல்வியையும் சேர்த்துக் கொடுப்பதால் இந்த பள்ளி மாணவர்கள் பட்டிமன்றம், பண்பலை என பல்வேறு இடங்களுக்கும் சென்று பரிசுகளை தட்டிவருவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே கொரோனா தடுப்பூசி விழிப்புணர் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள். பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் இணையம் வழியாகவும்,அலைபேசி வழியாகவும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக கடிதம் எழுதுமாறு அறிவுரை வழங்கினார்கள் .
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில்...," சமீபத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்க பள்ளிக்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை என்பதை அவர்களிடம் பேசும்போது அறிந்து கொண்டேன். எனவே பள்ளி மாணவர்களின் வாயிலாகவே அவர்களின் பெற்றோர்களுக்கும், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி , அரசின் இலவச கொரோனோ தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, மாணவர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நானும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோரும் கேட்டுக்கொண்டோம்.
அஞ்சல் அட்டையில் "தடுப்பூசி போடுவோம்.கொரோனாவை தடுப்போம் . இலவச தடுப்பூசியை இன்முகத்துடன் போட்டுக்கொள்வோம். அரசின் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்துவோம் " என்ற வாசகத்தை எழுதி , தங்களது பெற்றோர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தினர்.கொரோன காலத்திலும் இளம் வயது பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதம் .இதனை பொதுமக்களுக்கும்,பெற்றோர்களுக் கும் தெரிவிக்கவே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடமும் இதனை கூறும்போது நல்ல பலன் கிடைக்கும்” என்றார்.
இந்த செய்திய மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion