ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள் - சு.வெங்கடேசன் வாழ்த்து
பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு வாழ்த்து - நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூகவலைதளம் மூலமாக வாழ்த்து.
விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 2, 2023
பேரா. சுரேஷ்,
பேரா. சி. ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
1/2 pic.twitter.com/J5HlxCQFtR
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் முனைவர் படிப்பு முடித்தவர்வளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஆளுநர் கையால் பட்டங்களை பெற மறுத்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. முன்கூட்டியே வந்த விஜய்? ... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அவரின் X தள பக்கத்தில் : "விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. சி. ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு