Railway | திருச்சி - காரைக்குடி ரயில்வே தடத்தில் நாளை சோதனை ஓட்டம்
ரயில் பாதை அருகே வசிப்போரும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்
திருச்சி - காரைக்குடி ரயில்வே பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 89 கிலோ மீட்டர் தூர மின் ரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் வியாழக்கிழமை (17.02.2022) அன்று சட்டப்பூர்வ ஆய்வு நடத்துகிறார். திருச்சியிலிருந்து காலை 09.05 மணிக்கு புறப்படும் ஆய்வு ரயில் வழியில் ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய மின் வழித்தட குறுக்கீடு, உப மின் நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்த இருக்கிறார்.
CRS to inspect Tiruchi - Karaikudi electrified route Electrification work on the 89 Kms stretch of Tiruchi - Karaikudi has been completed. @GMSRailway @RailMinIndia .
— Arunchinna (@iamarunchinna) February 15, 2022
In this new electrified route, Commissioner of Railway Safety, Southern Circle, Bangalore Mr. Abhai Kumar Rai will conduct statutory inspection on Thursday (17.02.2022), CRS inspection will leave Tiruchi at 09.05 hrs on that day. .. . . .#madurai | @GMSRailway | @mducollector |
— Arunchinna (@iamarunchinna) February 15, 2022
ஆய்வின்போது முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே. மேத்தா, மின்மயமாக்கல் திட்ட மேலாளர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் பங்கு பெறுவர். பின்பு ஆய்வு ரயில் மாலை 03.20 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு காரைக்குடி - திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொருத்திய ரயில் மூலம் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார். எனவே பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?