மேலும் அறிய
வணிக வரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை - அமைச்சர் பி.மூர்த்தி
வணிக வரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை என்றும், நடப்பு நிதியாண்டில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் நூறு சதவிகிதம் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது. (2/2) pic.twitter.com/iW2903ymlE
— P Moorthy (@pmoorthy21) September 29, 2022
போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டம். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலங்களில் போலி பதிவுகள் குறித்து புகார் அளித்தால் அதை ரத்து செய்வதற்குண்டான பணிகள் உடனே மேற்கொள்ளப்படும். இதுவரை பதியப்பட்ட போலி பதிவுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இனி போலி பதிவுகளை மேற்கொண்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை , உலகநேரி , மாதிரி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் - மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான (1/2) pic.twitter.com/O1KdvPBrFv
— P Moorthy (@pmoorthy21) September 29, 2022
மேலும், நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் நடத்தப்பட்ட வணிக வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு, "வணிக வரியை முறையாக செலுத்தாக நபர்களிடம் சோதனை நடத்த கூடிய உரிமை வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு உண்டு. அதில் எந்த வேறுபாடும், ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சோதனை நடத்துகிறார்கள். அரசுக்கு வருவாய் செலுத்தாமல் ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து அவர்களை வரி செலுத்த வைக்கும் நோக்கில் தான் இம்மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

யாரையும் பழி வாங்கும் நோக்கம் இல்லை. நடப்பு நிதியாண்டில் தற்போது வரை மட்டும் வணிக வரித்துறையில் 66 ஆயிரம் கோடியும், பதிவுத்துறையில் 8 ஆயிரம் கோடியும் என மொத்தம் 74 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இந்த நிதியாண்டுக்குள் இரண்டு துறைகளும் சேர்த்து மொத்தம் 1.50 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து உள்ளோம்" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















