மேலும் அறிய
Advertisement
மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கும் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கல்வெட்டுகளை பிரதிகளைக்கொண்டு ஆவணம் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறு,விறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் இந்த நிலையில் கோவிலின் உள்பிரகாரம், இரண்டாம் பிரகாரம், அம்மன் சந்நிதி, சுவாமி சன்னிதி உள்பட கோயிலுக்குள் பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட 410- க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளனர், இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளவற்றை அறிக்கையாக தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் 3 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றி கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை அறிக்கையாகத் தயாரித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது வரை அந்த அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை. இந்நிலையில் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளவை குறித்தும் அதற்கு ஆதாரமாகவும்,கோயில் கல்வெட்டுகளை அப்படியே பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையில் கல்வெட்டியல் நிபுணர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றும் அதன் பின்னர் கல்வெட்டுகளை பிரதிகளைக்கொண்டு ஆவணம் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும் மதுரை. மீனாட்சியம்மன் கோயில்தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல கலை, கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிப்படுத்துகிறது. எனவே மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகள் படியெடுப்பது அதனை மேலும் உறுதிப்படுத்தும்” என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kamalam Paati | 8 ரூபாய்க்கு கருப்பட்டி ஆப்பம்.. கமலம் பாட்டியின் ஓய்வறியா உழைப்பும், புன்னகையும்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion