Madurai : தூய்மை பணியாளர்கள் போராட்டம்! தெருவெல்லாம் டன் கணக்கில் குப்பை! மாறிப்போன மதுரை!
தூய்மை பணியாளர்கள் போராட்ட இரண்டாம் நாள் போராட்டத்தால் நகராட்சி முழுவதும் 1600 டன் குப்பைகள் தேக்கம்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 28 கோரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரிடம் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
#மதுரை மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் டன் கணக்கில் குப்பைகள் தேங்கம் சாலை முழுவது மக்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. தூய்மை பணியாளர்களின் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என குரல் எழுகிறது.@abp pic.twitter.com/VyXIMtvCEU
— Arunchinna (@iamarunchinna) May 31, 2022
நாறுது மதுரை 😤@city_madurai பணியாளர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதால் 1700 டன் குப்பை தேக்கம்
— Vetri Dhaasan (@vetridhaasan) May 31, 2022
எங்கெங்கு காணினும் குப்பைகள் குவிந்து நகரமே நாறிக் கொண்டிருக்கிறது
அரசு தலையிடாவிட்டால் நிலமை மோசமாகும்!@CMOTamilnadu @KN_NEHRU @ptrmadurai @SuVe4Madurai#Madurai https://t.co/wNweEAqmtw pic.twitter.com/qXyymPuEJS