மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
மதுரை மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மதுரை மாவட்ட முழுவதிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக நாள்தோறும் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 103 டிகிரி பாரன்ஹீட் செல்சியஸை தாண்டி வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது.
#hot மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் குளுமை நீடித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதனை முட்டித்தூக்கும் வகையில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு நிலை பாதித்துள்ளது.@SRajaJourno @abpnadu pic.twitter.com/ObmigJatpS
— arunchinna (@arunreporter92) May 17, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















