மேலும் அறிய
Advertisement
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து! 2 பேர் உயிரிழந்த சோகம்! உரிமையாளர் கைது
தீ விபத்தில் காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் தீ விபத்தில் காயமடைந்த நபர்கள் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய பிரிட்ஜ் வெடித்ததில் தீ விபத்து
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் உள்ளது. இந்த பகுதியில் காலணிகள் மொத்த விற்பனை நிலையங்கள் அதிகம் உள்ளது. அதே போல் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ளதால், ஹோட்டல்கள், தங்கும் விடுதி உள்ளிட்ட பல தொழில்நிலையங்கள் செயல்படுகின்றது. இந்நிலையில் கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர்
விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். பரிமளா, சரண்யா ஆகிய இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
தீ காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் விடுதி்வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதி உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; 24 மணி நேர சேவையாக மாறும் மதுரை ஏர்போர்ட்? - எப்போது தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion