மேலும் அறிய
Advertisement
தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; 24 மணி நேர சேவையாக மாறும் மதுரை ஏர்போர்ட்? - எப்போது தெரியுமா?
அக்டோபர் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை தொடக்கம் என அதிகாரிகள் தகவல் - 24 மணிநேர சேவை வழங்க விமான நிறுவனங்களுக்கு அழைப்பு.
விமான நிறுவனங்களின் வருகையை பொறுத்து விமான வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் குறித்து அட்டவணை தயார் செய்யப்படும் எனவும் மேலும் விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என மதுரை விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madurai airport ; மதுரை விமான நிலையம் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் 24 மணி நேரம் செயல்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரவு நேர விமான சேவையை தொடங்க விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு உள்நாட்டு சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
24 மணி நேர சேவைக்கு கோரிக்கை
பலமுறை வணிக வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வர்த்தக மற்றும் தொழிற்சங்கம், பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவையாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் வரும் அக்டோபர் இறுதிக்குள் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் வகையில் பணியாளர்களுக்கு 3 சுழற்சி முறையில் பணிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது வரை மதுரை விமான நிலையம் இரவு 10.00 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, 24 மணி நேர விமான சேவை வழங்கப்படுவதில் (CISF) மத்திய தொழிற்படை பாதுகாப்பு படையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறிவந்த நிலையில், கூடுதலாக 77 CISF வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் மதுரை விமான நிலையத்தில் தற்போது 305 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர்.
தென் மாவட்ட மக்களுக்கு இது வரப் பிரசாதம்
மேலும், மதுரை விமான நிலைய ஊழியர்களும் சுழற்சி முறையில் பணியமடுத்தப்பட உள்ளனர். வரும் காலங்களில் 24 மணி நேரம் சேவையை தொடங்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் விமான சேவையை தொடங்க பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே சேவை வழங்கி வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தை 24 மணிநேர சேவையை தொடங்கினால் பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து மலேசியா, கோலாலம்பூர், சார்ஜா, குவைத், பகரைன், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இரவு நேரம் பயணிகள் திருச்சி சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளது தவிர்க்கப்படும் எனவும் தென் மாவட்ட மக்களுக்கு இது வரப் பிரசாதமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் விமான நிறுவனங்களின் வருகையை பொறுத்து விமான வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் குறித்து அட்டவணை தயார் செய்யப்படும் எனவும் மேலும் விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என மதுரை விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion