சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..
சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
![சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு.. Bijapur Sultan's coins found in the Sivagangai Arasaneri சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/62baf966bd9ad565336b66832623ed92_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த க.சரவணன் வித்தியாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக சிவகங்கை தொல்நடைக் குழுவிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தெரிவிக்கையில், “சிவகங்கையை அருகே உள்ள அரசனேரி கீழே மேடு பேச்சிக்குளம் முனிக் கோயிலில் மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக என்னிடம் ஒப்படைத்தார். இது செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது.
இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது. இக்காசுகள் குறித்த முழுமையான தகவலை தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் அவர்களின் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பீஜப்பூர் சுல்தான்கள் காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
சிவகங்கை அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் காசுகள் கண்டெடுப்பு. இதனை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன் வித்தியாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசாவிடம் ஒப்படைத்தார்.#கீழடி #தொல்நடைகுழு | #sivagangai @SRajaJourno pic.twitter.com/F2qxHXj0VO
— Arunchinna (@iamarunchinna) May 15, 2022
![சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/56e3fd6a0231ab145151f73494faf6a0_original.jpg)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)