மதுரை : பேருந்து படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி !
அவனியாபுரத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பாக பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி அரசு பேருந்து பயணம் செய்யும் மாணவர்கள் படியில் பயணம் செய்யக் கூடாது அவ்வாறு பயணம் செய்வதினால் உயிர் சேதம் ஏற்படுகிறது இந்த நாட்டின் எதிர்காலமான மாணவர் செல்வங்கள் படியில் பயணம் செய்து மரணம் அடைவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பேருந்து படிய பயணம் செய்து மரணம் அடைந்தார்.இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தபடுகிறது.@abpnadu
— Dheepan M R (@mrdheepan) August 30, 2022
இந்த நிலையில் நேற்று மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பேருந்து படியில் பயணம் செய்து மரணம் அடைந்தார் இதனால் போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகிய அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படுகிறது.
இது தொடர்பான செய்திகள் - Watch Video: பேருந்து படியில் ஆபத்தான பயணம்.. ஜஸ்ட் மிஸ் ஆகி தப்பித்த மாணவன் - அதிர்ச்சி வீடியோ..!
அதன்படி அவனியாபுரம் பெரியார் சிலை முன்பாக போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் ஆபத்து பயணம் குறித்து உணராமல் தொடர்ந்து இதுபோன்று படியில் பயணம் செய்கின்றனர். இதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதிகளுக்கு அரசு தனி கவனம் செலுத்து பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.