மேலும் அறிய

Lok Sabha Elections 2024: குக்கர்னா டிடிவி, டிடிவி னா குக்கர்; அவர் என்னோடும் மகளோடும் இருந்தது கம்மி - அனுராதா டிடிவி பரப்புரை

”அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும்., குக்கர் னா டிடிவி, டிடிவி னா குக்கர்., குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு” என அனுராதா பேசினார்.

குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா!.... அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும்., குக்கர் னா டி.டி.வி., டி.டி.வி., னா குக்கர் - உசிலம்பட்டியில் பரப்புரையின் போது அனுராதா டிடிவி தினகரன் பேச்சு.

தேர்தல் திருவிழா 2024

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக 40 தொகுதிகளில் வருகின்ற 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒவ்வொரு கட்சியும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி., தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா டி.டி.வி., தினகரன் வாக்கு சேகரித்தார்.

தேனி பாராளுமன்ற தொகுதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி 2 வது வார்டு பகுதி, பேருந்து நிலையம், அன்னம்பாரிபட்டி, கீரிபட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது துணைவியார் அனுராதா டிடிவி தினகரன் கிராமம் கிராமமாக சென்று பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மாதரை கிராமத்தில் அமமுக நிர்வாகிகள் அளித்த சமாதான புறாவை பறக்க விட்டு பரப்புரை செய்தார்.

அனுராதா டி.டி.வி., தினகரன்

பின்னர் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசிய அனுராதா டிடிவி தினகரன்..,"குக்கர் சின்னம் எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள், அவருக்கு போட வேண்டும் என எண்ணினாலும் வேறு சின்னத்திற்கு போட்டு விடாமல் சின்னத்தில் குளப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மற்றவருக்கும் எடுத்து சொல்லுங்கள். இதற்கு முன்னாள் வேறு ஒரு சின்னத்தில் நின்றதால் இதை சொல்கிறேன். அரசியல் பாதையை துவங்கியது தேனி தொகுதி, இந்த தொகுதிக்கு நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை அவரே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி செய்தாரோ அதே போல செய்வார். அவர் என்னோடும், என் மகளோடும் இருந்ததை விட உங்களோடு இருந்தது தான் அதிகம்.

குக்கர் சின்னம்

ஆர்.கே.நகரில் கிடைத்தது இந்த குக்கர் சின்னம், ஆர்.கே.நகரில் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தனராம் அதே போல இந்த தேனி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் குக்கர் போன்றது., தினசரி பால், சாப்பாடு வைப்போம். அந்த குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா!!! அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும். குக்கர் னா டிடிவி, டிடிவி னா குக்கர். குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு” என பேசினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிங்கம்புணரியில் வாக்கு சேகரிக்க களம் இறங்கிய கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி..

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lucky Baskhar Teaser: மிடில் கிளாஸ் வங்கி ஊழியராக துல்கர் சல்மான்.. கவனமீர்க்கும் லக்கி பாஸ்கர் டீசர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget